தனுசு
26.1.2020 முதல் 1.2.2020 வரைவேலை இழந்தவர்களுக்கு அடுத்த சில வாரங்களில் நல்ல உத்யோகம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அதற்கு அடித்தளமாக அமையும். குடும்ப ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை கட்டாயம் தேவை. தேவைக்கேற்ப இருக்கும் இடத்தை விட்டு வேறிடம் செல்வதற்கு திட்டமிடலாம். கூடிய வரை தனிமை, விரக்தியை தவிர்க்கவும். மனதை ஆன்மீகத்தில் செலுத்தவும். மாணவர்கள் கல்வியில் முன்னேற கூட்டுப்பயிற்சியில் ஈடுபடலாம். தொழில் வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் உண்டு. மூன்றாம் நபரின் தலையீடு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால் கணவன் மனைவியிடையே ஏற்படும் பிரச்சனைகளை நிதானமாக ஆராய்ந்து நீங்களே தீர்வு காணுங்கள். குழந்தைகளால் மகிழ்ச்சியுண்டு.
வழிபாடு: ஸ்ரீபைரவ வழிபாடும், கோளறு பதிகமும் தினமும் படித்து வருவதும் நன்மை தரும்.