3, 12, 21, 30
26.3.2023 முதல் 1.4.2023 வரை
கடின உழைப்பை கண்டு அஞ்சாத மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் சுபகாரியங்களில் கலந்து கொள்ள நேரலாம். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். பணவரவு நன்றாக இருக்கும். இழுபறியாக இருந்தவை சாதகமாக முடியக்கூடும். உங்களை பற்றி விமர்சனம் செய்து வந்தவர்கள் அதனை விட்டு விடுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாக பணிகளை செய்து முடிப்பார்கள். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். வழக்குகளில் நல்ல தீர்ப்பு வரும். பெண்களுக்கு மற்றவர்களிடம் கவனமாக பேசுவது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும். கலைத்துறையினருக்கு புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.