5, 14, 23
18.4.2021 முதல் 24.4.2021 வரை
எதிரில் இருப்பவரை சரியாக எடைபோடும் திறமை பெற்ற ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் நிலவி வந்த பணப் பற்றாக்குறை நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் கடும் முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். வீடு, வாகனம் போன்றவற்றை புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். எல்லாரும் நட்புடன் பழகுவார்கள். பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். மாணவர்களுக்கு அவசரப்படாமல் நிதானமாக மனதில் பதியும்படியாக பாடங்களை படிப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பழகும் மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா வேண்டாமா என்று சமயத்தில் சந்தேகம் ஏற்படலாம். அரசியல் துறையினருக்கு யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஆலோசனைகள் செய்து கொள்ளவும்.
பரிகாரம்: ரங்கநாதரை தரிசித்து வணங்க முன்ஜென்ம பாவம் தீரும். குடும்ப கஷ்டம் தீரும்.