(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
முடிவுகளை விரைவாக எடுக்கும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியவெற்றி உண்டாகும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றிபெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
பரிகாரம்: திருப்புகழ் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.


