28.8.2025 முதல் 3.9.2025 வரை
மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் தன்னம்பிக்கை வளரும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இதுவரை இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். அரசியலில் சுணக்கம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.