(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
குடும்பபாசம் மிகுந்தவரான நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இந்த வாரம் உடல் ஆரோக்கியம் மேம்படும். பூமி, வீடு தொடர்பான பிரச்னைகள் நல்ல முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். பெண்களுக்கு கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும்
பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும்.


