search-icon-img
featured-img

5, 14, 23

Published :

28.8.2025 முதல் 3.9.2025 வரை

வேகமாக எதையும் செய்தாலும் அதில் உள்ள நன்மை தீமை அறிந்து செயல்படும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த வாரம் திட்டமிட்டபடி காரியங்கள் நடந்து முடியாமல் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். அரசியல் நண்பர்களே, மேல்மட்ட தலைவர்களிடத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு அலுவலகத்தில் நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

பரிகாரம்: பெருமாளுக்கு துளசியால் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்னை தீரும்.