28.8.2025 முதல் 3.9.2025 வரை
மற்றவர்களுக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், தான் செல்வதுதான் சரி என்று உறுதியாக இருக்கும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த வாரம் மனோதிடம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். வேலைப் பளு குறையும். அரசியலில் திடீர் பதவி உயர்வு ஒன்று வர வாய்ப்புள்ளது. பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகப் பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.