28.8.2025 முதல் 3.9.2025 வரை
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்று வாழக்கூடிய எட்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் சுபச் செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்கிற மனோபாவம் வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கியமடையும். வீண் அலைச்சல் குறையும்.