28.8.2025 முதல் 3.9.2025 வரை
துன்பங்கள் வந்தாலும் அதனை மனதுக்குள் மறைத்து வெளியில் மகிழ்ச்சியை காண்பிக்கும் திறனுடைய ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த வாரம் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரத்தில் ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்கள் கடினமாக உழைத்தால் வெற்றி உறுதி. மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரியத் தடை கள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.