(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
நேர்மையும் நிதானமும் ஒருங்கே அமையப்பெற்ற முதலாம் எண்ணில் பிறந்தவர்களே, இந்த வாரம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்து வந்த தொல்லைகள் அகன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமையன்று குலதெய்வத்தை வணங்கி வர காரியத்தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.


