search-icon-img
featured-img

2, 11, 20, 29

Published :

21.8.2025 முதல் 27.8.2025 வரை

எந்த கஷ்ட சூழ்நிலையிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத இரண்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் மனத்துணிவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனுக்கு வேப்பிலை மாலை சாற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும்.