21.8.2025 முதல் 27.8.2025 வரை
தெய்வத்தை சாட்சியாக வைத்து காரியங்களை சாதிக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் அறிவுத்திறன் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல்வாதிகள் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
பரிகாரம்: குல தெய்வத்தை பூஜித்து வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.