(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
இந்த வாரம் பணவரவு சேர்ந்தாலும் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்னைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்கி வர காரியத்தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.


