(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
இந்த வாரம் வீண்குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷனை உண்டாக்கும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டு அதன்படி செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கவனத்தை சிதறவிடாமல் பாடங்களை படிப்பதும் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும்.
பரிகாரம்: நவகிரகத்தில் கேதுவை வழிபட்டு வர காரிய வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.


