search-icon-img
featured-img

9, 18, 27

Published :

(11.12.2025 முதல் 17.12.2025 வரை)

இந்த வாரம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்னைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரத்தும் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து வணங்கி வழிபட்டு வர வாழ்க்கை வளம் பெறும்.