இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி

Published: 31 Dec 2024

(உத்திரம் 2ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2ம் பாதம் வரை)

குடும்பம்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை, வருமானமும், செலவுகளும் கிட்டத்தட்ட சமமாகவே இருக்கும்.இருப்பினும், கடன் வாங்கவேண்டிய அவசியமிராது. அதே தருணத்தில், சேமிப்பிற்கும் சாத்தியமில்லை. ஏப்ரல் 26-ம் தேதியில் ஏற்படும் ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்குப் பல நன்மைகளை அளிக்கக்கூடிய கிரக மாறுதலாகும். ஆண்டின் முதல் நான்கு மாதங்கள், வரவும் செலவும் சமமாகவே இருக்கும். ராசிக்கு, குரு பகவானின் சுபப் பார்வை கிடைப்பதால், எதிர்பாராத இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். குடும்பச் சூழ்நிலை, நிம்மதியைத் தரும். குடும்பத்தில் சுப-நிகழ்ச்சிகள் நிகழ்வதால், சுபச் செலவுகள் அதிகமாக இருக்கும். சமாளிப்பதில் சிரமமிராது. பிள்ளை அல்லது பெண் ஒருவருக்கு, வெளிநாடு ஒன்றில் வேலை கிடைத்து, அதில் சேர வாய்ப்பு கிட்டும் என்பதையும் கிரக நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யம் நிலவும். செப்டம்பர் மாதம் முடியும் வரை, இத்தகைய நன்மைகளை எதிர்பார்க்கலாம். ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் அளவோடு நன்மைகள் ஏற்படும். இம்மூன்று மாதங்களிலும் சிக்கனமாக செலவு செய்வதும், உடல் நலனில் கவனமாக இருப்பதும், அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

உத்தியோகம்: ஏப்ரல் 26-ம் தேதி, கும்ப ராசியில் அமர்ந்துள்ள, சனி பகவானுடன் ராகு சேர்வது, சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும். இதுவரை காரணமில்லாமல் உங்களுக்கு மறுக்கப்பட்டுவந்த ஊதிய உயர்வு, பதவியுயர்வு, சலுகைகள் ஆகியவை இப்போது, எவ்வித முயற்சியும் இல்லாமல் உங்களைத் தேடி வரும். சிலருக்கு, தற்போதுள்ள நிறுவனத்திலிருந்து, வேறு நல்ல அலுவலகத்தில், கூடுதல் சலுகைகளுடன் வேலை கிடைக்கும். கும்ப ராசியில், ஏற்படும் ராகு, சனி, சுக்கிரன் சேர்க்கையும், சிம்மத்தில் கேதுவின் சஞ்சார நிலையும் சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலைகளாகும்.

தொழில், வியாபாரம்: புத்தாண்டு தினம் முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை, தொழில் காரகரான சனி பகவான், சிறந்த சுப பலம் பெற்று சஞ்சரிக்கிறார். ஏப்ரல் 26-ம் தேதி ராகுவும், சனியுடன் இணைவது, லாபகரமான கிரக நிலையாகும். இதே தருணத்தில், குரு பகவானும், வக்கிர கதியில் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து, கன்னி ராசியைப் பார்ப்பது, வர்த்தகத் துறையினருக்கு, லாபகரமான காலகட்டத்தைக் குறிக்கிறது. குரு பகவானின் பார்வை மே 10-ம் தேதி வரையில்தான் கிடைக்கிறது. மே 11-ம் தேதிக்குப் பிறகு, வர்த்தகத்தில் சிறிது பின்னடைவு ஏற்படக்கூடும். நிதி நிறுவனங்களினால் பிரச்னைகள் ஏற்படும். தொழிலாளிகளின் பிரச்னைகளும் கவலையை அளிக்கும். செப்டம்பர் 15-ம் தேதியிலிருந்து, மீண்டும் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இந்த முன்னேற்றம், இப்புத்தாண்டு முடியும் வரை நீடிக்கும் கிரகங்களின் சஞ்சார நிலைகளின்படி!!

கலைத்துறையினர்: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை, தொடர்ந்து கலைத்துைறயினருக்கு, கிரக நிலைகள் சாதகமாக இல்லை. அம்மாதம் 26-ம் தேதியிலிருந்து கிரக நிலைகளில் நல்ல மாறுதல் ஏற்படவிருக்கிறது. முதல் நான்கு மாதங்கள் வாய்ப்புகளும், வருமானமும் ஓரளவே இருக்கும். அதைக் கொண்டு, குடும்பம் நடத்துவது சற்று சிரமமாக இருக்கும். குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு, கவலையை அளிக்கும். மனைவியின் ஆரோக்கியத்திலும், சிறு சிறு பின்னடைவுகள் ஏற்படக்கூடும். குறிப்பாக, ஆகஸ்ட் மாதம் மனைவியின் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம்.

அரசியல் துறையினர்: ஏப்ரல் மாதம் 25-ம் தேதி வரை எவ்வித அரசியல் முன்னேற்றத்தையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது. கிரக நிலைகளின்படி, கட்சியில் செல்வாக்குக் குறையும். மேலிடத் தலைவர்கள் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆகஸ்ட் மாதத்தில், நீங்கள் சிறு வழக்குகளைச் சந்திக்க நேரிடும். பேச்சில் கவனமாக இருத்தல் நல்லது. செப்டம்பர் மாதம் ஏற்படும் கிரகக் கூட்டணியினால், தேவையற்ற பிரச்னைகளில் அகப்பட்டுக்கொள்ள நேரிடும். எந்நிலையிலும், வார்த்தைகளை அளந்து பேசுவது, மிகவும் அவசியம் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. எத்தகைய தருணங்களில், நாம் எந்தெந்த விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்? பேச வேண்டும்? என வழிகாட்டுவதில் ஜோதிடத்திற்கு இணையான கலை வேறு கிடையாது என்பதை ஈடிணையற்ற தனது அரசியல் நூலான "அர்த்த சாஸ்திரத்தில்" சாணக்கியர் விவரித்துள்ளார். அவற்றை நீங்கள் கடைப்பிடித்தல் நல்லது.

மாணவ - மாணவியர்: முதல் ஐந்து மாதங்களில் கல்விக்கு அதிகாரம் படைத்த கிரகங்கள் அனுகூலமாக இல்லை! அதன் பிறகு, சாதகமாக மாறி, வருடம் முடியும் வரை உங்களுக்கு உதவிகரமாக சஞ்சரிப்பதால், கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்விக்கு வெளிநாடு சென்று - வரும் வாய்ப்பும் வசதிகளும் கிட்்டும். விசா எளிதில் கிட்டும். அரிய இச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட வேண்டாம்.

விவசாயத் துறையினர்: ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் மிகவும் சுமாரான காலகட்டமாகும். வயல் பணிகள் கடுமையாக இருக்கும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதும் சற்று கடினமே! மே மாதம் 11-ம் தேதியிலிருந்து, விவசாயத் துறைக்குத் ெதாடர்புள்ள கிரகங்கள் சுப பலம் பெறுவதால், விவசாய வசதிகள் எளிதில் கிட்டும். வங்கி போன்ற நிதி நிறுவனங்களின் உதவியும் ஆதரவும் எளிதில் கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றிலிருந்து விடுபடுவதற்கு, கிரகங்கள் ஆதரவாக சஞ்சரிக்கின்றனர்.

பெண்மணிகள்: புத்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் அதிக நன்மைகளை எதிர்பார்க்க இயலாது! குடும்பப் பிரச்னைகள் கவலையை அளிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே பரஸ்பர அந்நியோன்யம் குறையும். திருமண முயற்சிகள் பலன் தராது. ஏப்ரல் 26-ந் தேதியிலிருந்து, கிரக நிலைகள் சாதகமாக மாறுகின்றன, படிப்படியாக!! குடும்பப் பொறுப்பிலுள்ள பெண்மணிகளுக்கு பல நன்மைகள் காத்துள்ளன. வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு, செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வரை மிகவும் அனுகூலமான காலகட்டம் ஆகும். புதிதாக வேலைக்கு முயற்சிக்கும் சகோதரிகளுக்கு, மனத்திற்குப் பிடித்த பணி கிடைக்கும். திருமண மாலை சூடக் காத்திருக்கும் கன்னியருக்கு மிக நல்ல வரன் அமையும்.

அறிவுரை: தினமும் உங்கள் இஷ்ட தெய்வத்தையும், குல ெதய்வத்தையும் பூஜித்து வந்தாலே போதும்.

பரிகாரம்: அருகிலுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று தரிசித்துவிட்டு வருவது, மேலும் பல நன்மைகளை அளிக்கும். திருக்கோயிலுக்குச் செல்லும்போது பசு நெய் எடுத்துச் செல்லத் தவற வேண்டாம்!

பிறந்தநாள் பலன்கள்