search-icon-img
featured-img

சிம்மம்

Published :

(மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் வரை)

குடும்பம்: ஜனவரி மாதம் 1-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை அஷ்டம ராசியான மீனத்தில், ராகு அமர்ந்திருப்பதாலும், ஸப்தம ஸ்தானமாகிய கும்பத்தில் சனி இருப்பதாலும், கணவர் - மனைவியரின் ஆரோக்கியத்தில் விசேஷ கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியமானதாகும். சில தருணங்களில், மருத்துவச் சிகிச்சை, தவிர்க்க இயலாதது. ஜீவன ஸ்தானத்தில், குரு அமர்ந்திருப்பதால், வரவை விட, செலவுகளே அதிகமாக இருக்கும். விவாகம் சம்பந்தமான முயற்சிகள் தடைபடும். கணவர் - மனைவியரிடைேய பரஸ்பர அந்நியோன்யம் குறையக்கூடும். அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டு, வாக்குவாதத்தில் முடியும்! மே 10-ம் தேதி வரையில், திட்டமிட்டும், சிக்கனமாகவும் ெசலவு செய்தல் அவசியம். இல்லாவிடில், புதிய கடன்களை ஏற்கவேண்டிவரும் மே மாதம் 11-ம் தேதி குரு பகவான், லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், வருமானம் உயந்து, நிதி நெருக்கடி தளரும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பல பிரச்னைகள், நல்லபடி தீரும். சுப நிகழ்ச்சிகள் நிகழும். உத்தியோகம் காரணமாகவோ, அல்லது வேறு காரணங்களுக்காகவோ, தற்காலிகமாக பிரிந்திருந்த கணவர் . மனைவியர் மீண்டும் ஒன்றுசேர்வர். பழைய கடன்கள் இருப்பின், அவற்றை அடைத்து நிம்மதி ெபறலாம். இப்புத்தாண்டு முடியும் வரையில், வருமானம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும்.

உத்தியோகம்: ஏப்ரல் மாதம் 25-ம் தேதி வரை, கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. ராசிக்கு 8-ம் இடத்தில், ராகுவும், தன ஸ்தானத்தில் கேதுவும் நிலைகொண்டிருப்பதால், உங்களுக்கு நியாயமாகக் கொடுக்கப்படவேண்டிய பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை மறுக்கப்படும். மே மாதம் 11-ம் தேதி, மிதுன ராசிக்கு மாறும் குரு பகவான், கும்ப ராசியில் அமர்ந்துள்ள சனி பகவானை, தனது சுபப் பார்வையினால், தோஷமற்றவராகச் செய்வதால், அலுவலகத்தில் பல நன்மைகள் ஏற்படும் ஆதாரம்: "பிருஹத் ஸம்ஹிதை" மற்றும் "ஜோதிட அலங்காரம்" ஆகிய புராதன ஜோதிட நூல்கள். இந்த நன்மைகள் ஆண்டு முடியும் வரை நீடிக்கின்றன. ஒருசிலருக்கு, இடமாற்றமும் ஏற்படக்கூடும்.

தொழில், வியாபாரம்: ஏப்ரல் மாதம் 25-ம் தேதி வரை அஷ்டம ஸ்தானத்தில் ராகுவும், மே மாதம் 10-ம் தேதி வரை ஜீவன ஸ்தானத்தில் குருவும் நிலைகொண்டிருப்பதால், சந்தை நிலவரம் கவலையை ஏற்படுத்தும். நியாயமற்ற போட்டிகளை சந்திக்க நேரிடும். நிதி நிறுவனங்களின் ஆதரவு குறையும். உங்கள் உற்பத்தியை இக்காலகட்டத்தில் அளவோடு வைத்துக் கொள்வது நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். மே 11-ம் தேதி வரை குரு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால், படிப்படியாக போட்டிகளை முறியடித்து, விற்பனையை உயர்த்த முடியும். லாபமும் அதிகரிக்கும். மேலும், பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகுவையும், சனியையும், குரு பார்ப்பது விசேஷமான நற்பலன்கள் உங்களுக்கு சற்று தாராளமாகவே அளிக்கக்கூடிய கிரக மாறுதலாகும். இந்த முன்னேற்றம் இப்புத்தாண்டு முடியும் வரை நீடிப்பதால், உங்கள் பொருளாதாரத்தைச் சீர்செய்துகொள்ள இயலும்.

கலைத்துறையினர்: புத்தாண்டு தினத்திலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை! வாய்ப்புகள் ஒரே சீராக இருக்கும். ஆயினும், வருமானம் மட்டும் மிகக் குறைவாகவே இருக்கும். சில தருணங்களில் அடிப்படை வசதிகளைக் குறைத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஏப்ரல் 27-ம் தேதியிலிருந்து படிப்படியாக, புதிய வாய்ப்புகள் வர ஆரம்பிக்கும். வருமானமும் அளவோடு அதிகரிக்கும். இந்நிலை, அக்டோபர் 9-ம் தேதி வரை நீடிக்கும். அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து சுக்கிரன் நீச்சமடைவதால், மீண்டும் வருமானம் பாதிக்கப்படும். டிசம்பர் 11-ம் தேதியிலிருந்து, மீண்டும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வருமானமும், உயர ஆரம்பிக்கும். இந்த ஆண்டு முடியும் வரை, புதிய வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருப்பதால், உள்ளத்தில் உற்சாகம் மேலிடும்.

அரசியல் துறையினர்: ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை மந்த நிலை நீடிக்கும். கட்சியிலும், அமைதி நிலவும். கட்சி செயல்பாடுகளிலும், எவ்வித முன்னேற்றமும் இராது. ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து மீண்டும் கட்சிப் பணிகளில் சூடுபிடிக்கும். சில கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதால், அதன் பின்விளைவுகள் உங்களையும் பாதிக்கும் என சனி - ராகு ஆகியவற்றின் சஞ்சார நிலைகள் குறிப்பிட்டுக்காட்டுகின்றன. மேல்மட்டத் தலைவர்களுடன் கருத்துவேற்றுமை ஏற்படக்கூடும். ஜனன கால தசா, புக்திகள் உங்களுக்குச் சாதகமாக இல்லாவிடில், வேறு கட்சிக்கு மாற்றம் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறு உள்ளதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. என்ன முடிவு எடு்ப்பது என்பதில், குழப்பம் மேலிடும். கட்சியில் தொண்டர்களின் ஆதரவு குறையாது. இருப்பினும், உயர்மட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் அதிருப்தியைத் தரும். இதுவே உங்கள் அதிருப்திக்கும், குழப்பத்திற்கும் காரணங்களாகும் என்பதை கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.

மாணவ - மாணவியர்: மே மாதம் 22-ம் தேதி வரை, கிரகங்கள் சாதகமாக சஞ்சரிக்கின்றனர். பாடங்களில் மனம் தீவிரமாக ஈடுபடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்னடத்தை உள்ள சக-மாணவர்களின் நட்பு கிடைக்கும். நேர்முகத் தேர்வுகள் இருப்பின், வெற்றி கிட்டும். மே 23-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 9-ம் தேதி வரை, ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் நல்லது. பிற மாணவர்களின் பிரச்னைகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல், விலகியிருப்பது உங்கள் எதிர்கால நன்மைக்கு அவசியமாகும். செப்டம்பர் 10-ம் தேதியிலிருந்து, வருடம் முடியும் வரையில், படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்விக்கு உதவிகள் கிடைக்கும்.

விவசாயத் துறையினர்: வருட ஆரம்பத்திலிருந்து, ஏப்ரல் மாதம் வரை வயல் பணிகள் சற்று கடினமாக இருக்கும். எதிர்பாராத அதிக மழையினால், பயிர்கள் சேதமடையக்கூடும். கால்நடைகளின் பராமரிப்பில் செலவுகள் அதிகரிக்கும்.

பெண்மணிகள்: ஸப்தம ஸ்தானத்தில் (7), ராகு மற்றும் சனி பகவானின் சேர்க்கை ஏற்படுவதால், கணவர் - மனைவியரிடையே ஒற்றுமை குறையும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். நெருங்கிய உறவினர்களிடையே அவசியமில்லாத வாக்குவாதமும், பகையுணர்ச்சியும் மேலிடும். இந்நிலை, மே 10-ம் தேதி வரை நீடிக்கும். வருமானத்திற்குள் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதிலும், சிரமமாக இருக்கும். மே 11-ம் தேதியிலிருந்து, குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். வேலைக்கு முயற்சித்துவரும் பெண்மணிகளுக்கு, நல்ல வேலை கிடைக்கும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, மே மாதம் 10-ம் தேதி வரையில், பல குடும்பப் பிரச்னைகளினால் ஆரோக்கியமும் பாதிக்கப்படக்கூடும். மே 11-ம் தேதியிலிருந்து, குடும்பச் சூழ்நிலையில் வருடம் முடியும் வரை நல்ல மாற்றம் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம்.

அறிவுரை: ஜனவரி 1-ம் தேதி முதல், மே 9-ம் தேதி வரை தேவையற்ற அலைச்சல்களையும், பிரயாணங்களையும், தரக்குறைவான உணவகங்களில் உண்பதையும் தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, காளஹஸ்தி, நாகமங்களா இவற்றில் ஏதாவது ஒன்றின் தரிசனம், தோஷங்களைப் போக்கடிக்கும் சக்தி வாய்ந்தது.