இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மகரம்

Published: 31 Dec 2024

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

குடும்பம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதியில் இருக்கும் நிலையில், உங்களுக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு, பிறக்கிறது! இத்தகைய சஞ்சார நிலையின்போது, பாதிக்கப்படும் ராசியினருக்கு, கடைசி பகுதியில், "வெகுமதி"யாக தான் ஒரு நன்மை செய்வதாக வாக்குறுதியளித்துள்ளார் சனி பகவான், துவாரகையில் கிருஷ்ண பகவானிடம்! இந்நிகழ்ச்சி புராதன நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது. ஜோதிட ரீதியிலும், ஏழரைச் சனிக் காலத்தின், முதல் ஐந்து வருடங்கள் சோதனையாக இருக்கும் எனவும், கடைசி இரண்டு வருடங்கள் நன்மை செய்வார் எனவும் கூறப்பட்டுள்ளது. மகர ராசியினருக்கு, ஏழரைச் சனியின் கடைசி பகுதி நடைபெறுகிறது, இப்போது! இத்தருணத்தில், சுக்கிரனும், அனுகூலமாக சஞ்சரிக்கிறார்! மே மாதம் 10ம் தேதி வரை, குரு பகவானும் சாதகமாக நிலைகொண்டுள்ளார். ஆதலால், ஜனவரி 1-ம் தேதியிலிருந்து மே மாதம் 10-ம் தேதி வரை குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும்.11-ம் தேதியிலிருந்து, நவம்பர் 2-ம் தேதி வரை சற்று சிரமமான காலகட்டமாகும். மீண்டும் நவம்பர் 3-ம் தேதியிலிருந்து ஆண்டு முடியும் வரை நன்மையான காலமாகும்.

உத்தியோகம்: ஜனவரி 1-ம் தேதியிலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரையில், நன்மைகள் நீடிக்கின்றன. காரணம், சுக்கிரன் மற்றும் சனி பகவான் இணைவதாகும். ஜனவரி 26-ம் தேதி ராகு, கும்ப ராசிக்கு மாறுவதால், மீண்டும் குடும்பத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். தன ஸ்தானத்தில், ராகு பிரவேசிப்பது, நல்லதல்ல! கைப்பணம் வீண் செலவுகளில் விரயமாகும். மேலதிகாரிகள் உங்கள் மீது குறை கூறிக்கொண்டேயிருப்பார்கள்!! இந்நிலை, வருகிற மே 10-ம் தேதி வரை நீடிக்கும். மே 11ம் தேதியிலிருந்து, குரு பகவான் அனுகூலமாக மாறுவதால், அலுவலகச் சூழ்நிலையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். உங்களைக் கண்டாலே வெறுப்புணர்ச்சியை வெளிப்படையாகவே காட்டும் அதிகாரி ஒருவர் இடமாற்றம் செய்யப்படுவதால், மனதில் நிம்மதி பிறக்கும். ஒரு சிலருக்கு, வேலையில் நல்ல மாற்றமும் ஏற்படக்கூடும். அதன் பிறகு, வருடம் முடியும் வரை வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும்.

தொழில், வியாபாரம்: ஆண்டின் முதல் நான்கு மாதங்கள், சந்தை நிலவரம் அனுகூலமாக இருக்காது என கிரக நிலைகள் சுட்டிக்காட்டுகின்றன. சந்தையில் நிலவும் போட்டிகள், நியாயமற்றவையாக இருக்கும். உங்கள் சரக்குகளுக்கு எதிர்பார்க்கும் விலை கிடைக்காது. லாபம் குறையும். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைப்பதும் கடினம். மே மாதம் 2-ம் வாரத்திலிருந்து சந்தை நிலவரத்தில் மிக நல்ல மாறுதல் ஏற்படுவதை அனுபவத்தில் காணலாம். புதிய விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. தேவையான நிதியுதவிகள் வங்கிகள் மூலம் கிடைப்பதற்கு வழி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதித் துறையினருக்கு, புதிய வெளிநாட்டு நிறுவனங்களுடன், நெருங்கிய தொடர்பு உண்டாகும். புதிய தொழில் துறைகளில் முதலீடு செய்யும் வாய்ப்பும் உருவாகும். வெளிநாடு சென்று வரும் சாத்தியக்கூறும் பலருக்கும் உள்ளது. உங்கள் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் சாத்தியக்கூறு உள்ளதையும் கிரக நிலைகள் வெளிப்படுத்துகின்றன. சனி பகவானின் தாக்கம், இவ்வாண்டின் பிற்பகுதியில் குறைய ஆரம்பிப்பதால், இப்புத்தாண்டில் பிரச்னைகளைவிட, நன்மைகளே அதிகமாக இருக்கும். இந்த உண்மையை இப்புத்தாண்டின் கடைசி மூன்று மாதங்களில் அனுபவத்தில் காணலாம்.

கலைத் துறையினர்: ஆண்டின் முதல் நான்கு மாதங்கள் வருமானம் ஏற்றத் தாழ்வு இல்லாமல் ஒரே சீராக இருக்கும் என்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன. அதனையடுத்த மூன்று மாதங்கள் அதாவது, ஜூலை 2025 முடியு வரை வாய்ப்புகளும், வருமானமும் சற்றுக் குறையும். இந்த மூன்று மாதங்களிலும், சிக்கனமாக செலவு செய்தல் நல்லது. ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியிலிருந்து, நவம்பர் 2-ம் தேதி வரை புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் உயரும். வெளிநாடுகளில் நிகழும் கச்சேரிகள், நாடகங்கள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கேற்கும் சாத்தியக்கூறும் உள்ளது.

அரசியல் துறையினர்: அரசியல் துறைக்கு சம்பந்தப்பட்ட கிரகங்கள், ஆண்டுப் பிறப்பிலிருந்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிப்பதால், கட்சியில் ஆதரவும், செல்வாக்கும் உயரும். மக்களிடையே உங்கள் கருத்துக்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பதற்கும் கிரக நிலைகள் வழிவகுக்கும். உயர் மட்டத் தலைவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும் அதிகரிக்கும். ஏப்ரல் 26-ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 2-ம் தேதி வரை கிரக நிலைகள் சரியில்லை! பேச்சில், மிக, மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணம். இல்லாவிடில், நீதிமன்றம் வரை செல்ல வேண்டிய அனுபவமும் உருவாகும். செப்டம்பர் 3-ம் தேதியிலிருந்து, ஆண்டு முடியும் வரை, மீண்டும் கிரக நிலைகள் சாதகமாக உள்ளன. நிம்மதியாகக் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தலாம்.

மாணவ - மாணவியர்: ஜனவரி 1-ம் தேதி முதல், ஏப்ரல் 26ம் தேதி வரை உற்சாகமான காலகட்டமாகும். படிப்பில் கவனம் செல்லும். நினைவாற்றல் அதிகரிக்கும். ஆன்மிகச் சிந்தனைகளில் மனம் செல்லும். ஆசிரியர்கள் மற்றும் விரிவுைரயாளர்கள் ஆகியோரின் ஆதரவும், வழிகாட்டுதல்களும், படிப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தும். விடுதிகளில் தங்கி, படித்துவரும் மாணவ, மாணவியருக்கு, மிக முன்னேற்றமான ஆண்டு இது. ஏப்ரல் 27-ம் தேதியிலிருந்து, செப்டம்பர் 11-ம் தேதி வரை அதிர்ஷ்டகரமான மாதமாகும். நேர்முகத் தேர்வுகளில், வெற்றி கிட்டும். செப்டம்பர் 12-ம் தேதியிலிருந்து, டிசம்பர் முடியும் வரை கல்வி முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும். பிற மாணவர்களுடன் நெருங்கிப் பழகாமலிருப்பது, உங்கள் எதிர்கால நலனிற்கு உகந்ததாகும்.

விவசாயத் துறையினர்: ஜனவரி 1-முதல், ஏப்ரல் 25-ம் தேதி வரை அனுகூலமான காலகட்டமாகும். விவசாய வசதிகள் பெருகும். விளைச்சலும், வருமானமும் திருப்திகரமாக இருக்கும். ஏப்ரல் 26-லிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி வரை கிரக நிலைகள் சாதகமாக இல்லை! ஆகஸ்ட் 3-லிருந்து ஆண்டு முடியும் வரை யோக பலன்களை எதிர்பார்க்கலாம். உழைப்பிற்கேற்ற விளைச்சலும் வருமானமும் கிட்டும். பழைய கடன்கள் இருப்பின், அவற்றிலிருந்து விடுபடலாம்.

பெண்மணிகள்: புத்தாண்டுப் பிறக்கும் தினத்திலிருந்து, மே மாதம் 10-ம் தேதி வரை அனைத்து அம்சங்களிலும், யோக பலன்கள் கிட்டும். குடும்பச் சூழ்நிலை மகிழ்ச்சியை அளிக்கும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் பெருமை தரும். திருமணத்திற்குக் காத்துள்ள கன்னியருக்கு, நல்ல வரன் அைமயும். நவம்பர் 2-ம் தேதி வரை கவலை இல்லாத காலகட்டமாகும். நவம்பர் 3-ம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ம் தேதி வரை கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இரவு நேரங்களில் தனியாக வெளிச் செல்லாமல் இருப்பது நல்லது.

அறிவுரை: இரவு நேரங்களில், தனியே செல்வதையும், வாகனம் ஓட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் மட்டும் பகல் பொழுதில் உணவருந்தி, இரவில் உபவாசமிருப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும். இயலாவிடில், இரவில் பால் பழம் மட்டும் சாப்பிடலாம்.

பிறந்தநாள் பலன்கள்