இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம்

Published: 21 Apr 2023

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: இதுவரை உங்கள் ராசிக்கு அஷ்டம (8) ஸ்தானமாகிய ரிஷபத்தில் சஞ்சரித்த குரு பகவான், இனி பாக்கிய ஸ்தானமாகிய மிதுனத்திற்கு மாறுவது, அளவற்ற நற்பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலைகளாகும். ரிஷபத்திலிருந்த குரு பகவான், மிதுன ராசிக்கு மாறுவது, மிகச் சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய மாறுதலாகும். துலாம் ராசியினருக்கு, மிதுனம் பாக்கிய ஸ்தானமாகும். புரட்டாசி 21-ம் (07-10-2025) தேதி வரையில், நற்பலன்கள் கிடைக்கும். புரட்டாசி 22-ம் (08-10-2022) தேதியன்று, குரு, கடக ராசிக்கு மாறும் வரை, பல நன்மைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். குறிப்பாக, மிதுன ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக, துலாம் ராசியைப் பார்ப்பது சிறந்த யோக பலன்களை அளிக்க வல்லது. குடும்பத்தில், சுப-நிகழ்ச்சிகள்நிகழும். துலாம் ராசியில் பிறந்துள்ள பெண்மணிகள் கருத்தரிப்பதற்கு உகந்த காலகட்டமிது!! சிலருக்கு, வசதியான வீட்டிற்கு மாற்றம் ஏற்படும். வெளிநாடு ஒன்றில் பணியாற்றிவரும் பிள்ளை அல்லது பெண்ணின் வருகை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். ஆரோக்கியத்தில் நல்ல அபிவிருத்தியைக் காணலாம். திருமண முயற்சிகளில் மனதிற்குப் பிடித்த வரன் அமையும். எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளதை குருபகவானின் சஞ்சார நிலை குறிப்பிட்டுக்காட்டுகிறது.

உத்தியோகம்: வேலைக்குச் சென்று வரும் துலாம் ராசியினருக்கு, வரும் சுமார் ஒரு வருடக் காலம், சிறந்த யோக பலன்களை அளிக்கக்கூடிய காலகட்டமாகும். மேலதிகாரிகளின் ஆதரவு பணிகளில் உற்சாகத்தை ஏற்படுத்தும். புதிய வேலைக்கு முயற்சி செய்துவரும் துலாம் ராசி அன்பர்களுக்கு, மனதிற்குப் பிடித்த நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். இதுவரை எவ்விதக் காரணமுமில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊதிய உயர்வு, இப்போது அளிக்கப்படும். வெளிநாடுகளில் பணியாற்றிவரும் துலாம் ராசியினருக்கு, சலுகைகள் கூடும்.

தொழில், வியாபாரம்: வரும் சுமார் ஒருவருடக் காலம் துலாம் ராசி அன்பர்களுக்கு, அதிர்ஷ்ட காலம் எனக் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. சந்தை நிலவரம் சாதகமாக இருக்கும். உற்பத்தியை அளவோடு அதிகரித்துக் கொள்ளலாம். சகக் கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள். வங்கி மற்றும் இதர நிதிநிறுவனங்கள் தேவையான தருணங்களில் நிதி சலுகைகள் கொடுத்து உதவிசெய்வார்கள். ஏற்றுமதித் துறையினருக்கு, புதிய வெளிநாட்டுத் தொடர்புகள் வருமானத்தை அதிகரிக்கும். ஒரு சிலர், வர்த்தகம் அபிவிருத்தி சம்பந்தமாக வெளிநாடு சென்று வரும் வசதியும் ஏற்படும். தொழிற்சாலைகளை விஸ்தரிப்பதற்கு, ஏற்ற காலமிது!

கலைத் துறையினர்: பாக்கிய ஸ்தானத்திற்கு அமர்ந்துள்ள குரு பகவான், உங்கள் ராசியை ஐந்தாம் பார்வையாகப் பார்க்கிறார்! நல்ல வாய்ப்புகள், எவ்வித முயற்சியுமின்றி, உங்களைத் தேடிவரும். வருமானம் உயரும். மக்களிடையே மதிப்பு அதிகரிக்கும். தசா, புக்திகள் அனுகூலமாக இருப்பின், வெளிநாடு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புள்ளதையும் கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன. உங்கள் நிதி நிலைைமயை சரி செய்து கொள்ள ஏற்ற தருணமிது. கருத்து வேற்றுமையினால், நீதிமன்றம் சென்றுள்ள கணவர் - மனைவியரிடையே பரஸ்பர சமரசம் ஏற்படும். பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்களின் படங்கள் அமெரிக்கத் திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பும் கிட்டும்.

அரசியல் துறையினர்: துலாம் ராசிக்கு, குரு பகவானின் பார்வை கிடைப்பதாலும், இந்த ராசி அரசியல் துறைக்கு அதிபதியான சுக்கிரனின் ஆட்சிவீடாக இருப்பதினாலும், விசுவாவசு தமிழ் புத்தாண்டு, துலாம் ராசியினருக்கு, ஓர் வரப்பிரசாதமாக அமையவிருப்பதை கிரக நிலைகள் எடுத்துக்காட்டுகின்றன.

மாணவ - மாணவியர்: புதனின் ஆட்சிவீடான மிதுனத்திற்கு, குரு பகவான், சித்திரை 28-ம் (11-05-2025) தேதியன்று மாறுகிறார். புரட்டாசி 22-ம் (08-10-2025) தேதியன்று, கடக ராசிக்கு மாறுகிறார். புத்தாண்டு ஆரம்பத்திலிருந்து, ஆவணி மூன்றாம் வாரம் முடியும் வரையில், சிறந்த கல்வி முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தும். விளையாட்டுகள் மற்றும் பேச்சு - எழுத்துப் போட்டிகளிலும் வெற்றிக்கனி உங்கள் கையில்தான்! ஆவணி மாதம் 4-ம் வாரத்திலிருந்து குரு பகவானின் சுப பலம் குறைகிறது! சிறு, சிறு உடல் உபாதைகளினாலும், தேவையற்ற பிரச்னைகளில் உங்கள் மனதைச் செலுத்துவதினாலும், படிப்பில் கவனம் குறையும். தேர்வுகளில் ஏற்படும் பின்னடைவைப் பார்த்தால், இதனைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில், நீங்கள் தலையிடாமல் இருப்பது உங்கள் கல்வி முன்னேற்றத்திற்கு உதவும்.

விவசாயத் துறையினர்: குரு பகவானின், மிதுன ராசி சஞ்சாரம் விவசாயிகளுக்கு பல நன்மைகளை அளிக்கவுள்ளது. விவசாயத்திற்கு அவசியமான தண்ணீர், உரம், விதைகள், கால்நடை வசதிகள் ஆகியவை போதுமான அளவிற்குக் கிடைக்கும். பயிர்கள் செழித்து வளர்ந்து, உங்கள் மனதைக் குளிரவைக்கும். சந்தையில், உங்கள் விளைபொருட்களுக்கு சந்தையில், எதிர்பார்த்ததைவிடச் சற்று அதிகமாகவே லாபத்தைப் பெற்றுக் கொடுப்பார், குரு பகவான்! புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று, கடக ராசிக்கு மாறும் வரை இந்த நன்மைகள் நீடிக்கும். அதன் பிறகு, சந்தை நிலவரம் படிப்படியாக மாறி, விற்பனையில், கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டிவரும். குரு பரிகாரம் உதவும். எளிய பரிகாரங்களைக் கீேழ கொடுத்திருக்கிறோம்.

பெண்மணிகள்: துலாம் ராசி அன்பர்களுக்கு, சித்திரை 28-ம் (11-5-2025) தேதியிலிருந்து, புரட்டாசி 21-ம் (7-10-2025) வரை குரு பகவான் அளித்தருளும் யோக பலன்களை அனுபவித்து மகிழ்வீர்கள். புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து, குரு பகவான் கடக ராசிக்கு மாறுவதால், அவரால் நீங்கள் அனுபவித்துவந்த நன்மைகள் படிப்படியாகக் குறையும். இருப்பினும், கடினப் பிரச்னை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில், குருவின் சுபப் பார்வை, உங்கள் ராசிக்குக் கிடைக்கிறது.

அறிவுரை: "10-ல் குரு - பதவிக்கு ஆபத்து…!" என்றொரு பழமொழி உண்டு. குரு பகவான், கடக ராசியில் இருக்கும்வரை வேலை பார்க்கும் இடத்திலும், வியாபாரத்திலும் ஜாக்கிரதையாக இருந்தால் போதும்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், ஏழை பெண் குழந்தை ஒன்றிற்கு, எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, புத்தாடை வழங்குவது சிறந்த பரிகாரமாகும்.

பிறந்தநாள் பலன்கள்