இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

தனுசு

Published: 21 Apr 2023

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் வரை)

குடும்பம்: குரு பகவான், உங்கள் ராசிக்கு அதிபதியாவார். புத்தாண்டின் ஆரம்பத்தில், ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு, சித்திரை 28-ம் (11-5-2025) தேதியன்று, சப்தம ஸ்தானமாகிய மிதுனத்திற்கு மாறுவது, மிகவும் அனுகூலமான கிரக மாறுதலாகும். சப்தம ஸ்தானம் (7) குடும்ப நலன்களையும், கணவர் - மனைவியரிடையே நிலவும் ஒற்றுமையையும், பரஸ்பர அந்நியோன்யத்தையும் குறிக்கும் ராசியாகும். அங்கு குரு பகவான் சஞ்சரிப்பது குடும்பத்திற்கு பல நலன்களையும் அளிக்கக்கூடிய நிலையாகும். கணவர் - மனைவியரிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேற்றுமை விலகும். விவாக ரத்து வரை சென்றுவிட்ட நிலைைமயில்கூட, பரஸ்பர சமரசம் ஏற்படும். மிதுனத்தில் உள்ள குரு பகவான், தனது சொந்த ராசியையும் பார்ப்பது, மேலும் பல நன்மைகளைக் கொடுக்கும். இந்த ராசியில் பிறந்துள்ள திருமணமான பெண்கள் கருத்தரிப்பதற்கு உகந்த தருணமிது! விவாக முயற்சிகளில் நல்ல வரன் அமைந்து, மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேற்றுமையும், பகையுணர்ச்சியும் நீங்கும்.

உத்தியோகம்: புரட்டாசி 21-ம் (7-10-2025) தேதி வரையில் குரு பகவான் மிதுன ராசியில் அமர்ந்து, 7-ம் பார்வையாக தனுர் ராசியைப் பார்ப்பது, சிறந்த யோக பலன்களைக் குறிக்கிறது. மேலதிகாரிகள், சக-ஊழியர்கள் அனைவரும் உங்களுடன் ஒத்துழைப்பார்கள். தசா, புக்திகள் சுப பலம் பெற்றிருப்பின், ஊதிய உயர்வையும் எதிர்பார்க்கலாம். வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள அன்பர்கள், தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியன்று குரு பகவான், கடகத்திற்கு மாறுவதால், அவரால் ஏற்பட்டுவந்த நன்மைகள் குறையும். பணிகளில் கவனமாக இருத்தல் அவசியம். ேதவையில்லாமல், வேலை நேரங்களில் சக-ஊழியர்களுடன் பேசிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில், வியாபாரம்: புரட்டாசி மாதம் 3-ம் வாரத்தில், ராசிக்கு அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுவதால், உங்கள் உற்பத்தியை அளவோடு வைத்துக் கொள்வது, நஷ்டம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். உற்பத்திக்கு அவசியமான மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பதாலும், நியாயமற்ற போட்டிகளினாலும், லாபம் குறையும், புதிய முதலீடுகளையும், விற்பனைத் திட்டங்களையும் ஒத்திப் போடுதல் நல்லது. கூட்டாளிகளும், ஒத்துழைக்க மறுப்பார்கள்.

கலைத் துறையினர்: புரட்டாசி 21-ம் (7-10-2025)தேதி வரை, கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக உள்ளன. நல்ல வாய்ப்புகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும். அதன் பிறகு, ஆண்டு முடியும்வரை, ஓரளவே வருமானம் வருவதால், உங்கள் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. நாம் எப்பொழுதெல்லாம்், எந்தெந்த அம்சங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்பதை முன்கூட்டியே அறிவித்து, நம்மைப் பாதுகாக்கும் கலை ஜோதிடம். திரைப்படத் தயாரிப்பாளர்கள், கடன் வாங்கி, படம் தயாரிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், கிரக நிலைகளின்படி, எதிர்பார்க்கும் அளவிற்கு, உங்கள் படங்கள் ஓடாது.

அரசியல் துறையினர்: புரட்டாசி 21-ம் (07-10-2025) தேதி வரையில், அரசியல் துறைக்கு அதிகாரம் கொண்ட, கிரகங்களும், குரு பகவானும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கின்றனர். புரட்டாசி 22-ம் (8-10-2025) தேதியிலிருந்து, குரு அனுகூலமாக இல்லை! கட்சியில் ஆதரவு குறையும். தொண்டர்களின் மறைமுகப் பேச்சுகள் கவலையளிக்கும். தினமும் உங்களைச் சந்தித்துவந்த உயர்மட்டத் தலைவர்கள், திட்டமிட்டு உங்களைத் தவிர்ப்பார்கள். மனதில் அச்சமும், கவலையும் ஏற்படும்.

மாணவ - மாணவியர்: புத்தாண்டின் ஆரம்பத்திலிருந்து, புரட்டாசி முடியும் வரை, கல்வித் துறையுடன் தொடர்புள்ள கிரகங்கள் அனுகூலமாக உள்ளன. ஐப்பசி முதல் வாரத்திலிருந்து, பாடங்களில் மனதைச் செலுத்த இயலாதபடி, கவலைகளும், சபலங்களும், சகவாச தோஷமும் ஏற்படக்கூடும் என கிரக நிலைகள் சூட்சுமமாகக் குறிப்பிடுகின்றன. முக்கியமாக, பிற மாணவர்கள், மாணவியருடன் நெருங்கிப் பழகாமலிருப்பது மிகவும் அவசியம். சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். குறிப்பாக, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள். தாங்களுண்டு, தங்கள் படிப்பு உண்டு என்றிருப்பது அவசியம். பெற்றோர்களுக்கும், தங்கள் பிள்ளை, பெண் மீது கவனம் இருக்கட்டும். ஏனெனில், கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை. இது ஓர் முன்னெச்சரிக்கைக்காகவே மட்டும் கூறியுள்ளோம். காலந்தவறி விழித்துக் கொள்வதில் யாருக்கு, என்ன பயன்….?

விவசாயத் துறையினர்: புரட்டாசி முடியும் வரையில், நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். இரவு - பகல் பாராது, வயலில் உழைத்ததற்கு, பலன் கிடைக்கும். கால்நடைகள் விருத்தியடையும். ஐப்பசி மாதத்திலிருந்து, அதிக மழையினால், பயிர்கள் பாதிக்கப்படக்கூடும். பழைய கடன்கள் இருப்பின், கவலையளிக்கும்.

பெண்மணிகள்: விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு முதல், புரட்டாசி 21-ம் தேதி வரை குரு பகவான் உங்களுக்கு மிகவும் ஆதரவாக சஞ்சரிப்பதால், குடும்ப வாழ்க்கை இனிக்கும்! மழலைச் செல்வம் வேண்டுமெனில், அந்த ஆசை நிைறவேறும். வேலைக்கு முயற்சிக்கும் வனிதையருக்கு, நல்ல வேலை கிடைக்கும். புரட்டாசி 21-ம் தேதி வரை, நல்ல யோக பலன்கள் உங்களைத் தேடி வரும். புரட்டாசி 22-ம் தேதியிலிருந்து, சிறு சிறு பிரச்னைகளும், உடல் உபாதைகளும் கவலையை அளிக்கும். பரிகாரம் மகத்தான பலனளிக்கும்.

அறிவுரை: புரட்டாசி மாதம் 22-ம் தேதியிலிருந்து (8-10-2025) வரை குடும்பத்திலும், வெளியிலும் உறவினர்கள், நண்பர்கள். ஆகியோருடன் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம். சிறு விஷயங்களுக்கும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

பரிகாரம்: வியாழக்கிழமைகளில், இஷ்ட தெய்வத்தை வணங்கி வருவது நல்ல பலனையளிக்கும். புண்ணிய நதிகள், திருக்கோயில் புஷ்கரணிகள் ஆகியவற்றில் புனித நீராடுவதும், தோஷத்தைப் போக்கும். இயலாதவர்கள் தங்கள் பெற்றோர்களையும், வீட்டிலுள்ள பெரியோர்களையும் காலையில் ஸ்நானம் செய்தபிறகு வணங்கி வருவது, கைமேல் பலனளிக்கும்.

பிறந்தநாள் பலன்கள்