search-icon-img
featured-img

மகரம்

Published :

(உத்திராடம் 2ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2ம் பாதம் வரை)

17-8-2025 முதல் 16-9-2025 வரை

குடும்பம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதி நடைபெறும் இத்தருணத்தில், குரு, சுக்கிரனும் அனுகூலமாக இல்லை! திட்டமிட்டு செலவு செய்யாவிடில், இம்மாதத்தின் கடைசி வாரத்தில், கடுமையான பணப் பற்றாக்குறையை நீங்கள் சமாளிக்க வேண்டிவரும். அஷ்டம ஸ்தானத்தில் (8) சூரியனும், கேதுவும் இணைந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையினால் குணமாகும். நெருங்கிய உறவினர்களிடையே தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட்டு, மன-அமைதி பாதிக்கப்படும். பழைய கடன்கள் கவலையை அளிக்கும். விவாக வயதில் பெண் அல்லது பிள்ளை இருப்பின், வரன் அமைவது தடைபடும். உஷ்ண சம்பந்தமான சரும உபாதைகள் ஏற்பட்டு, எளிய சிகிச்சை மூலம் குணம் கிடைக்கும். பாக்கிய ஸ்தானத்தில், செவ்வாய் சஞ்சரிப்பதால், வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ள முடியாது! நெருங்கிய உறவினர்களிடையே தேவையில்லாத வாக்கு

வாதமும், பகையுணர்ச்சியும் மேலிடும். அஷ்டம அஷ்டம ஸ்தானத்தில் உலவும் சூரியன் - கேதுவின் நிலையினால், ஏதாவதொரு உபாதை உடலை வருத்தும். சில தருணங்களில், சிறு மருத்துவ சிகிச்சை தேவைப்படக்கூடும். திருமண முயற்சிகளில், வெற்றிகிடைப்பது சற்று கடினம். வெளியூர்ப் பயணங்களில், ஏமாற்றமே மிஞ்சும்.

உத்தியோகம்: ஏழரைச் சனியின் கடைசி பகுதியின்போது, சனி பகவான் ஏதாவதொரு நன்மை செய்வார் எனக் கூறுகிறது, “பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதன ஜோதிடக் கிரந்தம்! பராசர மகரிஷியால் இயற்றப்பட்ட நூல் இது எனக் கூறப்படுகிறது. தற்காலிகப் பணியிலுள்ள அன்பர்கள், அவரவரது பணிகளில், நிரந்தரம் செய்யப்படுவார்கள். புதிய வேலைக்குமுயற்சித்துவருபவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று, வேலை பார்க்க வேண்டுமென்ற ஆர்வமிருப்பின், இம்மாதத்தில் முயற்சிக்கலாம்.

தொழில், வியாபாரம்: சந்தையில் போட்டிகள் கடுமையாக இருப்பினும், உங்கள் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். நல்ல விலையையும் எதிர்பார்க்கலாம். நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விற்பனை நிலையங்கள் திறப்பதற்கு ஏற்ற மாதம் இது! சகக் கூட்டாளிகள், ஒத்துழைப்பார்கள். ஏற்றுமதித் துறையினர், வியாபாரம் சம்பந்தமாக, வெளிநாடு சென்று வரும் வாய்ப்பும் உருவாகும். ஏற்றுமதித் துறையினருக்கு, வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். இதன் காரணமாக, நிதி நெருக்கடி தளரும்.

கலைத் துறையினர்: சுக்கிரன் ஒருவர் மட்டுமே, இம்மாதம் முழுவதும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். மற்ற கிரகங்களால், நன்மை எதையும் எதிர்பார்ப்பதில் பயனில்லை. வாய்ப்புகள் குறையக்கூடும். கிடைக்கும் வாய்ப்புகளும், நல்ல வருமானத்தைப் பெற்றுத் தராது. குறைந்த வருமானத்தைக் கொண்டு, குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவேண்டி வரும்.

அரசியல் துறையினர்: அரசியல் துறை, பெரும்பாலும், சுக்கிரனின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. அவர் மட்டும் உங்களுக்கு ஆதரவாக சஞ்சரிக்கிறார். அரசியல் துறைக்கு, சம்பந்தப்பட்ட மற்ற கிரகங்கள் சாதகமாக இல்லை!மேலிடத் தலைவர்கள் உங்களைச்சந்திப்பதைத் தவிர்த்து வருவது, வேதனையை அளிக்கும்.கட்சித் தொண்டர் களிடையே செல்வாக்கு குறையும்.பேச்சு களைதற்போதைக்குத் தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

மாணவ - மாணவியர்: கல்வித் துறையுடன் நேரிடையான தொடர்பு கொண்டுள்ளது, புதன் கிரகமாகும். குரு மற்றும் சுக்கிரனுக்கும் இத்துறையின் மீது ஆதிக்கம் உள்ளது. இவ்விரு கிரகங்களும், ஓரளவே சாதகமாக உள்ளன. ஆதலால், படிப்பில், பாடுபட்டு உழைக்க வேண்டி வரும். புத்தகத்தைக் கையில் எடுத்தாலே, சோர்வும், அசதியும் உங்களை ஆட்கொள்ளும். ஓய்விற்கு உடல் கெஞ்சும். பாடங்களில் மனத்தைச் செலுத்துவது கடினமாக இருக்கும்.

விவசாயத் துறையினர்: அத்தியாவசியப் பொருட்களான, தண்ணீர்், உரம், விவசாய வசதிகள், கால்நடைகள் குறைவில்லாது கிடைக்கும். இருப்பினும், மிகக் கடுமையான வெயிலில், வியர்வை சிந்தி உழைக்க நேரிடம்இதுவே உங்கள் ஆரோக் கியத்தையும் பாதிக்கும் என கிரக நிலைகள் குறிப்பிடுகின்றன.

பெண்மணிகள்: ஆரோக்கியம் பாதிக்கப்படும். காரணமில்லாத, கற்பனையான குடும்பக் கவலைகள் உடல் நலனைப்பாதிக்கும். கடின உழைப்பும், ஆரோக்கியத்தைக் குறைத்துவிடும். பிற பெண் மணி களுடன் வாக்கு வாதத்தைத் தவிர்ப்பதும் அவசியம். வேலைக்கு முயற்சித்துவரும் வனிதை யருக்கு, நல்ல பணி கிடைப்பது தாமதப்படும்.

அறிவுரை: நேரம் கிடைக்கின்ற போதெல்லாம்,ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். கூடியவரையில், வெயிலில் அலைவதையும், கடின உழைப்பையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: தினமும் காலை - மாலை இருவேளைகளிலும் கந்தர் சஷ்டி கவசம் அல்லது, விஷ்ணு சகஸ்ர நாமம் சொல்லி வந்தால் போதும். கவலையின்றி இருக்கலாம்.

இயலாதவர்கள், லிகித ஜெபமாகப் போற்றிக் கொண்டாடப்படும், நோட்டுப் புத்தகங்களில் “ராம ஜெயம்” 108 முறை அல்லது முடிந்தால் 1008 எழுதி வரவும். புண்ணிய பலன்களை அனுபவத்தில் கண்டு இன்புறலாம்.

அனுகூல தினங்கள்

ஆவணி : 1-5, 10-12, 17-19, 23-25, 29, 30.

சந்திராஷ்டம தினங்கள்

ஆவணி : 6 பின்னிரவு முதல், 9 காலை வரை.