இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம்

Published: 17 Nov 2025

(17-11-2025 முதல் 15-12-2025 வரை)

(சித்திரை 3ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3ம் பாதம் வரை)

குடும்பம்: சுக்கிரன் ஒருவரைத் தவிர, மற்ற கிரகங்களினால், யாதொரு நன்மையையும் இம்மாதத்தில் எதிர்பார்க்க முடியாது, வரவும் செலவும் சரிசமமாகவே இருக்கும். ஆயினும், பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை! திருமண முயற்சிகளில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு, அதன்பிறகு வரன் அமையும். கணவர் - மனைவியரிடையே சிறு சிறு பிணக்குகளினால் பரஸ்பர அந்நியோன்யம் குறையும். மாதக் கடைசியில், பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்குச் சாத்தியக்கூறு உள்ளது. உத்தியோகம் காரணமாக, கணவர் - மனைவி பிரிந்திருக்க நேரிடும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நீடிக்கின்றன.

உத்தியோகம்: பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ராகு வக்கிர சனி இணைந்திருப்பதால், உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். சக-ஊழியர்களின் மறைமுகப் பேச்சுக்கள் கவலை அளிக்கும். தாற்காலிகப் பணியாளர்களுக்கு, பணி நிரந்தரம் தாமதப்படும். அந்நிய நாடுகளில் வேலைபார்த்துவரும் உத்தியோகஸ்தர்கள் சிறு விடுப்பில் தாய்நாடு வந்து செல்லும் வாய்ப்பும் உருவாகும். அன்றாடப் பணிகளில், அஜாக்கிரதையினால் சிறு சிறு தவறுகள் ஏற்படக்கூடும்,

தொழில், வியாபாரம்: சந்தை நிலவரம் இவ்வாரம் முழுவதும் ஒரே சீராக இராது. உங்கள் சரக்குகளுக்கு, விற்பனை விலை குறையக்கூடும். இது உங்கள் லாபத்தைப் பாதிக்கும். சகக் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். வெளிமாநிலங்களின் உங்கள் சரக்குகளுக்கு, எதிர்பார்த்துள்ள விலை கிடைப்பது சற்று கடினமே! ஏற்றுமதித் துறையினருக்கும், வெளிநாட்டு ஆர்டர்கள் குறையும். கூடியவரையில், புதிய விற்பனைக் கிளைகள் திறப்பதைத் தவிர்த்தல் அவசியம். ஏனெனில் கிரக நிலைகள் சாதகமாக இல்லை!! அடிக்கடி மாறிவரும் சந்தை நிலவரம், உங்கள் லாபத்தைப் பாதிக்கும்.

கலைத் துறையினர்: "நிச்சயமாகக் கிடைக்கும்...!" என நம்பியிருந்த வாய்ப்புகள், கடைசி விநாடியில் கைநழுவிப்போகும்!! வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ஏமாற்றத்தையே தரும். எதிர்பார்க்கும் அளவிற்கு, வசூலும், வருமானமும் கிடைப்பது கடினம் என்பதை கிரக நிலைகள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன. வரவைவிட, செலவுகளே அதிகமாக இருக்கும். உங்கள் புகழ் செல்வாக்கு, ஆகியவை பாதிக்கப்படக்கூடும். முன்கூட்டியே நிகழ்்்ச்சியைப் பற்றி முழுமையாக விசாரித்துத் தெரிந்துகொண்டு, ஒப்புக்கொள்வதா? அல்லது மறுப்பதா? - எனத் தீர்மானித்து முடிவெடுப்பது நல்லது.

அரசியல் துறையினர்: சுக்கிரன் ஓரளவே உதவிகரமாக சஞ்சரிக்கிறார். ஆதலால், மக்களிடையே ஆதரவு குறையும். உங்கள் பிரசாரக் கூட்டங்களுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தாலே இந்த உண்மை தெரியவரும். மேல்மட்டத் தலைவர்கள், பொதுமக்க ள் ஆகியோரிடையே செல்வாக்கும், பாதிக்கப்படும்.

மாணவ - மாணவியர்: வித்யாகாரகரான புதனும், கல்வித் துறையுடன் தொடர்பு கொண்டுள்ள மற்ற கிரகங்களும் உங்களுக்கு அனுகூலமாக இல்லை! படிப்பில் மனத்தை ஊன்றிச் செலுத்துவது சற்று கடினமானதாக இருக்கும், இம்மாதம் முழுவதும்! புத்தகத்தைக் கையில் எடுத்தாலே உறக்கமும், சோம்பலும் மேலிடும். பள்ளி - கல்லூரி வகுப்பறைகளில் கவனக்குறைவு ஏற்படும். நேரத்தில் படுத்து, குறிப்பிட்ட நேரம் வரை உறங்கி, எழுவது மனத்தைப் பாடங்களில் கவனமாகச் செலுத்துவதற்கு, உதவிகரமாக இருக்கும்.

விவசாயத் துறையினர்: விவசாயத் துறை சூரியன் - செவ்வாய் ஆகிய இவ்விரு கிரகங்களின் நேரிடை ஆதிக்கத்தில் உள்ளன. ஆதலால், வயல் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தண்ணீர்ப் பற்றாக்குறை இராது. இதர விவசாய வசதிகளான உரம், விதை - இடுபொருட்களும் குறைவின்றிக் கிடைக்கும். கால்நடைகள் நல்ல அபிவிருத்தியை அடையும்.

பெண்மணிகள்: பெரும்பான்மையான கிரகங்கள் உங்களுக்குச் சாதகமாக வலம் வருகின்றன. உழைத்த உழைப்பிற்குப் பரிசாக நல்ல விளைச்சல் கிடைக்கும் அது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலையை சரிசெய்துகொள்ள ஏற்ற மாதம் இந்தக் கார்த்திகை!

அறிவுரை: கிரக நிலைகள் உங்களுக்கு ஆதரவாக இப்புத்தாண்டில் சஞ்சரிப்பதால், பண வரவும், லாபமும் எதிர்பார்ப்பை விட சற்று அதிகமாகவே இருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி, உங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஏற்ற தருணம் இந்த மாதம்!

பரிகாரம்: ராசிக்கு 10-ம் இடத்தில், சனி - ராகு இணைந்திருப்பதால், ராகுவிற்கும், சூரியனுக்கும் உடனடியாக பரிகாரம் செய்வது அளவற்ற நன்மை செய்யும். சூரியனார்க் கோயில் சென்று, அவருக்கு அபிஷேகம் செய்துவிட்டு மண் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றிவிட்டு வந்தால் போதும். தோஷம் நீங்கி, பரிசு கிட்டும்உங்களுக்கு! சூரியனார்க் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், உங்கள் வீட்டுப் பூஜையறையில் ஞாயிற்றுக்கிழமைகளில் 5 மண் அகல் விளக்குகளில் சூரியபகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வந்தால் போதும். தோஷம், கதிரவனைக் கண்ட பனி போல் விலகி ஓடிச் சென்றுவிடும்.

அனுகூல தினங்கள்:

கார்த்திகை : 1-3, 8-10, 14-16, 20, 21, 25-27.

சந்திராஷ்டம தினங்கள்:

கார்த்திகை : 17-ந் தேதி இரவு முதல், 19-ந் தேதி பின்னிரவு வரை.

பிறந்தநாள் பலன்கள்