இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம்

Published: 21 Apr 2023

(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம், பூரட்டாதி 1 2 3 ம் பாதம்)

மமற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை அதிகம் உடைய கும்ப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 2 ல் சஞ்சரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதார நிலையில் மேம்பாடு, வருமானம் உயர்வு, இனிய பேச்சால் மற்றவர்களை கவர்தல், மதிப்பு மரியாதை உயர்வு, நல்ல பழக்க வழக்கங்கள் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம், எதிர்காலம் பற்றிய பயம், மனக்குழப்பம், தைரிய குறைவு ஏற்பட வாய்ப்பு உண்டாகும். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. விடாமுயற்சி ஒன்றே வெற்றி தரும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 7 ஐ பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. நண்பர்கள் ஆதரவாக செயல்படுவர்.குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 9 ஐ பார்ப்பதால் தந்தையால் அனுகூலம் உண்டு. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்களை கவனமாக கையாளுங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சம்பள விஷயத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: சோளிங்கர் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்