இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மேஷம்

Published: 21 Apr 2023

(அஸ்வினி,பரணி,கார்த்திகை 1ம் பாதம்)

சிந்தித்து காலம் கடத்துவதை விட செயலே முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படும், மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 12 ல் விரைய குருவாக சஞ்சரித்து, தேவையற்ற வீண் விரயங்கள், வீட்டில் திருமணம், காதுகுத்து இது போன்ற சுப நிகழ்ச்சிகளால் சுப விரயங்கள் தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசியில் ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறை நிகழ்வுகளை நினைத்து வருந்தாமல் அவற்றைப் படிப்பினையாக ஏற்றுக் கொள்வதால் மன அழுத்தத்தை தவிர்க்கலாம். நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். கோபத்தை தவிர்த்து மற்றவர்களுடன் சுமூக உறவை மேற்கொள்வது நல்லது. யோகா மற்றும் தியானம் மன அமைதியை அதிகரிக்கும்.குரு பகவான் தனது 5 ம் பார்வையாக 5 ஐ பார்ப்பதால், குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. தெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.குருபகவான் தனது 7 ம் பார்வையால் 7 ஐ பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்றமுண்டு. குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 9ஐ பார்ப்பதால் வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. மூத்தோர் மற்றும் குருவின் வழிகாட்டுதல் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை.யோகா மற்றும் தியானம் செய்வது நினைவாற்றலை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: பழனி முருகப் பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்

பிறந்தநாள் பலன்கள்