இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கடகம்

Published: 21 Apr 2023

(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)

அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் கடக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 9 ல் சஞ்சரித்து தந்தையால் அனுகூலம், தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம், மூத்தோர் மற்றும் குருவின் ஆசி, வெளிநாட்டு தொடர்பால் நன்மை தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 2 ஐ பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாளாக வர வேண்டிய பணம் வந்து சேரும்.குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 4 ஐ பார்ப்பதால் தாய் உடல்நிலை சீராகும். புதிய வீடு வாகனம் சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும்.குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 6 ஐ பார்ப்பதால் கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். தேவையில்லாத நட்பில் இருந்து விலகி இருங்கள்.அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது.சகாக்களிடம் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம்.

பரிகாரம்: விழுப்புரம் அருகே உள்ள சிங்கிரி கோயில், பூவரசன்குப்பம், பரிக்கல் ஆகிய நரசிம்மர் ஆலயங்களுக்கு சுவாதி நட்சத்திரத்தன்று சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்