search-icon-img
featured-img

மகரம்

Published :

(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம்1,2 ம் பாதம்)

உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 3 ல் சஞ்சரித்து காரிய தடை, தன்னம்பிக்கை குறைவு, எதிர்காலம் பற்றிய பயம், எதிர்மறை சிந்தனை, எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம், மனச்சோர்வு, அசதி, ஸ்திரமாக எந்த முடிவையும் எடுக்க இயலாமை, மனக்குழப்பம் தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 4ல் அடுத்த அஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம், தாய் உடல்நிலை பாதிப்பு, மன அமைதியின்மை, காரிய தடைகள் அனைத்தும் விலகும். குரு பகவான் தனது 5ம் பார்வையால் 8ஐ பார்ப்பதால் புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் ஈடேறும். பழைய வீட்டை சீர்படுத்துவீர்கள். சொத்து சேர்க்கை உண்டாகும். குரு பகவான் தனது 7ம் பார்வையால் 10ஐ பார்ப்பதால் தொழில் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். குரு பகவான் தனது 9ம் பார்வையால் 12ஐ பார்ப்பதால் திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடர்பான செலவினங்கள் உண்டு. வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தூக்கமின்மை சீராகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு உங்களைப் பற்றி வீண் வதந்திகள் வரலாம். கலைத்துறையினர் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: திருச்சி உச்சிப்பிள்ளையாரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.