இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம்

Published: 21 Apr 2023

(சித்திரை 3 4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1 2 3 ம் பாதம்)

எந்த நிலையிலும் தன்னிலை மாறாத துலா ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரித்து உடல்நிலை பாதிப்பு, எதிரிகளால் பிரச்னைகள், குடும்ப தேவைக்காக கடன்,கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, உறவுகளால் மனக்கசப்பு தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 7 ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். வியாபார ரீதியான தொடர்புகள் பெருகும். வியாபாரம் செழிக்கும். இதுவரை இருந்த கடன் பிரச்னைகள் நீங்கும். வாழ்வில் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும்.குருபகவான் தனது 7 ம் பார்வையால் ராசியை பார்ப்பதால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆளுமைத் திறன் பெருகும். எந்த சூழ்நிலை எளிதாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள்.குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 3 ஐ பார்ப்பதால் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. மனோ பலம் அதிகரிக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்த பணிச்சுமை நீங்கும். தடைபட்ட ஊதிய உயர்வு தேடி வரும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பர்.அரசியல்வாதிகளுக்கு சகாக்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவர்.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளால் பிரபலம் அடைவர்.

பரிகாரம்: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்