search-icon-img
featured-img

தனுசு

Published :

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

அறிவின் களஞ்சியமாக விளங்கும் தனுசு ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 4 ல் சஞ்சரித்து தாய் உடல் நிலையில் பாதிப்பு. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்பு, வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள், காரிய தடை, மாணவர்களுக்கு கல்வியில் பிரச்னை, தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். தாய் உடல்நிலை சீராகும். பூர்வீக சொத்து விஷயங்களால் ஆதாயம் உண்டு. குழந்தை பாக்கியம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். தெய்வ அனுகூலம் உண்டு. குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 9 ஐ பார்ப்பதால் தந்தையால் அனுகூலம் உண்டு.குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 11 ஐ பார்ப்பதால் எதிர்பாராத பண வரவு உண்டு. முகம் பொலிவு பெறும். ஆளுமை திறனால் எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். புகழ் செல்வாக்கு உயரும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். உங்கள் நிறுவனம் பிரபலமடையும்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவர். மாணவர்கள் கல்வியில் மேன்மை பெறுவர். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினர் தற்போது உள்ள வாய்ப்புகளால் புகழ் பெறுவர்.

பரிகாரம்: திரு ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.