search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

(கார்த்திகை 3 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1 2 ம் பாதம்)

பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்து உங்களுடைய முயற்சிகளில் வெற்றி, நண்பர்கள் உறவினர்களால் மகிழ்ச்சி, பதவி உயர்வு, ஊதிய உயர்வு தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள், மருத்துவச் செலவுகள், உடல் ஆரோக்கிய பாதிப்பு, தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 4 ஐ பார்ப்பதால் தாய் உடல்நிலை சீராகும். வீடு வாகன சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். புது வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 6 ஐ பார்ப்பதால் எதிரிகளால் வரும் பிரச்னைகள் குறையும்.கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வழக்கு விஷயங்கள் சாதகமாகும். நீண்ட நாட்களாக புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு புது வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் ஆளுமைக்கும் திறமைக்கும் சவால்கள் வரலாம். கலைத்துறையினர் தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.