(உத்திரம் 2,3,4 ம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
எதிலும் தந்திரமாக செயல்பட்டு வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரித்து உடல் ஆரோக்கிய மேன்மை, கடன் பிரச்னை கட்டுக்குள் வருதல் போன்ற நன்மைகளை தந்த குரு பகவான், தற்போது உங்கள் ராசிக்கு 8 ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 12 ஐ பார்ப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 2 ஐ பார்ப்பதால் பொருளாதார நிலை மேம்படும். குடும்பத்தில் குதூகலமான சூழல் உருவாகும். குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 4 ஐ பார்ப்பதால் புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். தாய் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மக்களை அணுகும் பொழுது கவனம் தேவை.கலைத்துறையினர் தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: திருவெண்காட்டில் உள்ள சுவேதாரண்யேஸ்வரர் மற்றும் புதன்பகவானை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


