11.9.2025 முதல் 17.9.2025 வரை
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய ஒன்றாம் எண் வாசகர்களே! நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த வாரம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். பெண்களுக்கு நல்லுறவு ஏற்படும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. அரசியல்துறையினருக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில்ஏற்பட்ட தடை நீங்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள்.