7.8.2025 முதல் 13.8.2025 வரை
அடுத்தவரை அனுசரித்து செல்வதில் கெட்டிக்காரர்களான இரண்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்து செல்வார். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதான போக்கு காணப் படும். பெண்களுக்கு மனக் குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
பரிகாரம்: லட்சுமியை பூஜித்து வர பொருள் வரவு கூடும்.