(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
புன்சிரிப்புடன் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் இரண்டாம் எண் அன்பர்களே, இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த காரியத் தடைகள் நீங்கும். மனதில் இருந்த குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு லாபகரமாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்ற மடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று நவகிரகத்தில் சந்திரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.