(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
மனதில் அனைவருக்கும் நல்லது நினைக்கும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த வாரம் மனதில் மகிழ்ச்சியான எண்ணங்கள் வரும். திடீரென்று அவசர முடிவை எடுக்க வேண்டியிருக்கும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நட்பு, உறவினர்களிடம் சுமுகமான நிலை நீடிக்கும். உல்லாசப்பயணம் செல்லும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாகனங்கள் வாங்குவதில் இருந்த தடை நீங்கும். மனை, வீடு வாங்க எடுக்கும் முயற்சிகள் சற்று தாமதமாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: பெருமாளை வியாழக்கிழமை அன்று தரிசித்து அர்ச்சனை செய்ய எல்லா நலனும் உண்டாகும்.


