search-icon-img
featured-img

4, 13, 22, 31

Published :

21.8.2025 முதல் 27.8.2025 வரை

தனது தன்னம்பிக்கையினால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறும் நான்காம் எண் அன்பர்களே, இந்த வாரம் பயணங்கள் மகிழ்ச்சி தரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். பணநெருக்கடி குறையும். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும்.

பரிகாரம்: திங்கட்கிழமை அன்று அம்மனை வணங்கி வர, காரிய தடைகள் நீங்கும்.