search-icon-img
featured-img

5, 14, 23

Published :

11.9.2025 முதல் 17.9.2025 வரை

எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது முடிக்கும் கருமமே கண்ணாக இருக்கும் ஐந்தாம் எண் வாசகர்களே! இந்த வாரம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு அனுகூலம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மனதெளிவு உண்டாகும்.

பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.