7.8.2025 முதல் 13.8.2025 வரை
புத்திசாதுர்யத்துடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றி பெறும் ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த வாரம் வீண்செலவு குறையும். சாமர்த்தியமான பேச்சினால் காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருபப்பவர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடித்து மனநிறைவு அடைவார்கள். பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனை வில்வத்தால் அர்ச்சனை செய்து வாருங்கள். காரிய வெற்றி கிடைக்கும்.