11.9.2025 முதல் 17.9.2025 வரை
உறவுக்கும் நட்புக்கும் முதலிடம் கொடுத்து காரியங்களை சாதித்துக் காட்ட கூடியவராக இருக்கும் ஆறாம் எண் வாசகர்களே! இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. பெண்கள் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல்துறையினர் மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். மாணவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் சிவன் கோயிலை வலம் வாருங்கள்.