4.9.2025 முதல் 10.9.2025 வரை
அதிகாரத்தோரணை மிக்க ஆறாம் எண் அன்பர்களே, இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்னை தலை தூக்கலாம். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரிகாரம்: பெருமாளுக்கு மல்லிகை மலரை அர்ப்பணித்து வழிபட்டு வரவும்.