11.9.2025 முதல் 17.9.2025 வரை
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் ஏழாம் எண் வாசகர்களே. இந்த வாரம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வாழ்க்கைத்துணை மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். பெண்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். அரசியல்துறையினருக்கு கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.