7.8.2025 முதல் 13.8.2025 வரை
உத்வேகத்துடன் எதிலும் வேகம் காட்டும் ஏழாம் எண் அன்பர்களே, இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பண வரவு குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர்
நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: விநாயகருக்கு தேங்காய் மாலை அர்ப்பணித்து வழிபடவும்.