4.9.2025 முதல் 10.9.2025 வரை
எப்போதும் தர்ம சிந்தனையுடன் காணப்படும் எட்டாம் எண் வாசகர்களே இந்த வாரம் எந்த ஒரு சின்ன வேலையை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படும். மனதில் வீண் கவலை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்களுக்கு எதையும் செய்து முடிக்கும் மனோதைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: தினமும் முன்னோர்களை வணங்கவும்.