11.9.2025 முதல் 17.9.2025 வரை
நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் ஒன்பதாம் எண் வாசகர்களே! இந்த வாரம் பணவரவு அதிகமாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய் வரக்கூடும். கலைத்துறையினருக்கு பொறுப்புகள் கூடும். அரசியல்துறையினருக்கு உயர்வு கிடைக்கம். மாணவர்களுக்கு மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோயிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்.