7.8.2025 முதல் 13.8.2025 வரை
உயர்வான எண்ணங்களுடன் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுடன் நட்பு கொள்ளும் ஒன்பதாம் எண் அன்பர்களே, இந்த வாரம் நல்ல செயல்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பார்த்த பணவசதி கிடைக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படுவார்கள். வேலை திறமைக்கு பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பெண்களுக்கு உங்களது காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைகுறையும்.
பரிகாரம்: பெருமாள் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட துன்பங்கள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.