(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: சனிபகவானும் ராகுவும் லாபஸ்தானத்தில் இருப்பதால் வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்ப செலவுகளும் கட்டுப்படும். அஷ்டம ஸ்தானத்தில் இருந்த செவ்வாய் பாக்கிய ஸ்தானத்திற்கு இடம் பெயர்வது மிகச் சிறப்பான பலன்களைத் தரும். ராசிக்கு உரியவர் திரிகோண ஸ்தானமாகிய பாக்கியஸ்தானத்தில் பலம் பெறுவதால் ராசி பலம் பெறுகிறது. நினைத்த காரியங்கள் நிறைவேறும். சேமிப்பு அதிகரிக்கும். வீடு வாங்குதல், மனை வாங்குதல் போன்றவற்றில் இருந்து தடைகள் நீங்கும். தொழில் வேகம் எடுக்கும். சகோதர உதவி கிடைக்கும். ஆறுக்கு உடைய புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பாராத சில நல்ல விஷயங்களும் செய்திகளும் கிடைக்கும். குழந்தைகள் எதிர்காலம் வளம் பெறும்.
கவனம் தேவை: எட்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால் உடல் நலனில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அர்த்தாஷ்டம குரு சரி இல்லாத நிலைமையில் இருப்பதால் சுகங்கள் குறையும். தாயார் உடல் நிலையில் கவனம் அவசியம். தேவையற்ற விரோதங்களும் மனக்கலக்கங்களும் வியாதி பயமும் வீணாசைகளும் இருக்கும். மனம் கெட்டவற்றை நாடும். கவனம் தேவை.
பரிகாரம்: வராகப் பெருமாளை வணங்குங்கள். வாழ்க்கை வளம் பெறும்.


