(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: வெற்றிக்குரிய செவ்வாய் ஆறாம் இடத்தில் அமர்ந்திருப்பதால் வெற்றி மீது வெற்றி வந்து சேரும். மனதில் திடமான சிந்தனைகள் உருவாகும். ராசியில் குரு அமர்ந்ததால் ஏற்பட்ட தோஷம் அவர் வக்ரம் பெறுவதால் நீ ங்கும். அவருடைய பார்வையின் பலத்தால் முன்னேற்றம் ஏற்படும். ஜீவன ஸ்தானம் பலம் பெறுவதால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உழைப்புக்கான பலன் கிடைக்கும்
கவனம் தேவை: எக்காரணத்தை முன்னிட்டும் தவறானபுரிதல்கள் கூடாது. குடும்ப உறவுகளை விட்டுக்கொடுத்து சீராக வைத்துக் கொள்ளவும். பணிபுரியும் இடத்தில் தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் வேண்டாம். அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளுங்கள், சனி வக்ர நிவர்த்தி பெற்றிருக்கும் நேரம் என்பதால் எல்லா விஷயத்திலும் சற்று ஜாக்கிரதையாக எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. கொடுக்கல் வாங்கல்களில் பிரச்னைகள் ஏற்படலாம். திடீர் செலவுகள் ஏற்பட்டு கடன் வாங்க நேரிடலாம். குழந்தைகள் வழியில் செலவுகள் ஏற்படலாம்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடும், இஷ்ட தெய்வ வழிபாடும் மிக முக்கியம்.


