(7.8.2025 முதல் 13.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் ராசிக்கு இரண்டில் ஆட்சி பெற்று இருப்பது ஒரு பலம் தான். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் இருந்து உங்கள் தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். எதையும் நிதானமாக எதிர்கொண்டால் பிரச்னைகளைச் சமாளித்து விடலாம். சிறிய அளவில் பொருளாதாரப் பிரச்னை ஏற்பட்டாலும் கூட குருவின் பார்வையால் தீர்ந்துவிடும் ஏதோ ஒரு இடத்தில் இருந்து சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டு வேலை, பயணம் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
கவனம் தேவை: இரண்டில் ராகு, எட்டில் கேது, ஏழில் சூரியன், புதன், ஆறில் குரு என முக்கியமான கிரகங்கள் சாதகமற்று சஞ்சரித்துக் கொண்டிருப்பதால் எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிய முயற்சிகள் இப்போதைக்கு வேண்டாம். நிதானத்தோடு இருப்பதைக் கொண்டு இந்த வாரத்தைத் தள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். பணிச்சுமைஅதிகம் இருக்கும். குடும்பப் பெண்களுக்கு மன பாரம் அதிகரிக்கும்.
பரிகாரம்: வயதானவர்களுக்கு உதவுங்கள். சனி ராகு தோஷம் நீங்க பூஜை அறையில் கூடுதல் விளக்கு ஒன்று ஏற்றி வாருங்கள்.