search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(31.7.2025 முதல் 6.8.2025 வரை)

சாதகங்கள்: ராசியில் ஐந்தாம் இடத்திற்குரிய சுக்கிரன் அமர்ந்து ஏழாம் இடத்தைப் பார்வை இடுவதன் மூலமாக குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் இருந்தாலும், பெரும் பாதிப்பு இருக்காது. அதற்குத் தகுந்த படியாக குருவும் சப்தம ஸ்தானத்தைப் பார்க்கின்றார். மூன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் கேது உங்களுடைய சிந்தனையை வளப்படுத்தி முயற்சிகளை வெற்றி பெற வைப்பார். வாரத் தொடக்கத்தில் ராசிநாதன் புதன் இரண்டாம் இடத்தில் சூரியனோடு இணைந்து யோகத்தைத் தருகின்றார். பத்திரிகை, தகவல் தொழில்நுட்ப நண்பர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

கவனம் தேவை: குடும்ப இடத்தில் சூரியன் இருக்கின்றார். அது நீர் ராசி என்பதால் பெரிய அளவு பாதிப்பு இருக்காது. கோபத்தையும் அவசரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். ஜன்மகுரு சில கஷ்டங்களைத் தரவே செய்வார். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது எழும். அதை பெரிதுபடுத்த வேண்டாம்.

பரிகாரம்: குருவும் சுக்கிரனும் ராசியில் இணைந்திருப்பதால், பெருமாள் கோயிலுக்குச் சென்று தாயாரையும் பெருமாளையும் வணங்குங்கள்.