(21.8.2025 முதல் 27.8.2025 வரை)
சாதகங்கள்: ராசியில் ராசிநாதன் ஆட்சி பெற்றிருக்கிறார். குரு 11-ல் அமர்ந்து மூன்றாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் ஏழாம் இடத்தையும் பார்க்கிறார். குருவின் பார்வையால் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். அவர் 11-ஆம் இடத்தில் ஸ்தான பலமும் பெற்றிருப்பதால் நினைத்த செயல்கள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். நல்ல லாபம் தொழிலில் கிடைக்கும். சனி ராகுவால் ஏற்படும் பிரச்னைகள் கட்டுப்படும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சிக்கல்கள் வராது. 12ல் சுக்கிரன் இருப்பதும் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தரும். நிம்மதியான எண்ணம், விருந்துகள் மூலம் மனமகிழ்ச்சி வரும். முக்கியமான பிரமுகர்களை சந்திப்பீர்கள். நல்ல கலந்துரையாடல் நிகழும். பொழுது இனிமையாகக் கழியும்.
கவனம் தேவை: இரண்டாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கிறார். ராசியில் உஷ்ணக் கிரகமான சூரியன் இருக்கிறார். இந்த இரண்டையும் கருத்தில் கொள்ள வேண்டும். இனிமையாகப் பேச வேண்டுமே தவிர கருத்து வேறுபாடு ஏற்படும் அமைப்பில் பேசி சிக்கலில் மாட்டிக் கொள்ளக்கூடாது. சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அவர்களால் செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு இயன்றளவு உதவி செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.